கோவை: நயினார் நாகேந்திரன் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கடைசி வரையில் பதிலளிக்காமல் நழுவிச்சென்றார்.
கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று ஆர்எஸ் புரத்தில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
விஜய் குறித்தும், தேசிய ஜனநாய கூட்டணி குறித்தும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். இதனிடையே, பேட்டியின் போது நிருபர்கள் நயினார் நாகேந்தின் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய், திரிஷாவை விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
எஸ்கேப்
அப்போது அந்த கேள்விக்கு மட்டும் பதில் அளிக்காமல், மற்ற கேள்விக்கு கவனம் செலுத்தி பதில் அளிதார். மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் அந்த கேள்வியைக் கேட்டனர். ஆனால், கடைசி வரை நயினார் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் அவர் நழுவினார்.
அதேபோல தவெக, பாஜவின் B Team-ஆ என கேட்டதற்கும், அந்த கேள்வியை விஜயிடம் தான் கேக்க வேண்டும் என்று பதில் அளிக்க மறுத்தார்.
தமிழக அரசு வழங்கிய ரூ. 5 ஆயிரம் குறித்து விமர்சித்த முருகன் பீகாரில் தேர்தலுக்கு முன் ரூ.10 ஆயிரம் கொடுத்தது குறித்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.

