“சினிமா வேறு, அரசியல் வேறு”- எஸ்.பி.வேலுமணி கடும் தாக்கு…!

கோவை: கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி தேர்தல் நிலவரம் குறித்து தெரிவித்ததுடன் தவெக தலைவர் விஜய் மீது கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக ஆட்சியை தக்க வைக்கவும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றவும் தீவிர முயற்சியில் உள்ளனர். மேலும், நாம் தமிழர் மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இருப்பதால், இந்த முறை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவி வருவதாக குறிப்பிட்டார்.

தொண்டாமுத்தூர் தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். சாலைகள், மேம்பாலங்கள், குடிநீர் திட்டங்கள் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் கோவைக்கு ஒரு புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை.

மேலும், மின்கட்டணம், சொத்து வரி உயர்வு போன்றவை மக்களை பெரிது பாதிக்கிறது, தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து வாக்கு பெறலாம் என்று திமுக நினைக்கிறது. தேர்தலில் வென்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவச சிலிண்டர், கல்விக்கடன் ரத்து, பெண்களுக்கு மாதம் ரூ.2,000, முதியோர் உதவித்தொகை உயர்வு போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது என்றார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் திறக்கப்பட்டது நான் முதல்வன் செயல்பாட்டு மையம்…

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் செயல்பாட்டு மையம் திறக்கப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் பாரதியார் பல்கலைக்கழக செயல்பாட்டு மையத்தினை காணொலி...

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.