கோவையில் ‘மிஸ்டர் கோயம்புத்தூர்-2026’ ஆடிஷன்: இளம் மாடல்களுக்கு அரிய வாய்ப்பு!

கோவை: இளம் தலைமுறையின் மாடலிங் கனவுகளை நனவாக்கும் வகையில், ‘வோக் மாடலிங் கம்பெனி’ சார்பில் ‘மிஸ்டர் கோயம்புத்தூர்-2026’ (VMC Season 1) போட்டிக்கான முதல் கட்ட ஆடிஷன் கோவையில் நடைபெற்றது.

Shilpah Seetharaman தலைமையில் நடைபெற்ற இந்த ஆடிஷன், கோவை நால்ம்தா டான்ஸ் & ஃபிட்னஸ் ஸ்டூடியோவில் கடந்த 15ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கியது. இதில் கோவை மட்டுமின்றி, வெளியூரிலிருந்தும் பல இளம் மாடல்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த ஆடிஷனில் பங்கேற்றவர்களுக்கு தொழில்முறை க்ரூமிங், மேக்கப் பயிற்சி, கோரியோகிராபி அடிப்படை பயிற்சி, நேர்முகத் தேர்வு மற்றும் போட்டோஷூட் போன்ற பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டன. மேலும், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள், ரேம்ப் வாக் பயிற்சி முதல் தன்னம்பிக்கை வளர்க்கும் கம்யூனிகேஷன் செஷன் வரை பல புதிய அனுபவங்களை பெற்றனர். இது அவர்களின் மாடலிங் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Mr Coimbatore audition session

இந்த போட்டியின் மூலம் புதிய முகங்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மேடைகளில் அறிமுகப்படுத்துவது தான் முக்கிய நோக்கம் என்றும், திறமை மற்றும் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஷில்பா சீதாராமன் தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற இந்த முயற்சி, மாடலிங் துறையில் சாதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிஷனின் நடுவராக இம்ரான், சூர்யா கிரண் பங்கேற்றனர். மேக்அப் பயிற்சிகளை கன்னி, புகைப்பட பயிற்சிகளை குணா ஆகியோர் வழங்கினர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாண்புமிகு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்...

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.