பில்லூர் அருகே யானைகளுக்கு இடையே மோதல்- யானை உயிரிழப்பு…

கோவை: பில்லூர் அணை பகுதியில் இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு யானை உயிரிழந்தது.

மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அருகே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. குறிப்பாக காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு யானை கூட்டம் ஒன்று பில்லூர் அணை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதில் இரண்டு யானைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இரண்டு யானைகளும் ஒன்றுக்கொன்று கடுமையாக மோதிக்கொண்ட நிலையில் அதில் ஒரு ஆண்யானைக்கு கழுத்து, தும்பிக்கை, கால், வயிற்று பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த அந்த ஆண்யானை தாக்குபிடிக்க முடியாமல் அங்கேயே விழுந்த நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது.

Advertisement

இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் யானை உயிரிழந்திருப்பதை கண்டு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யும் பணிகளை துவக்கி உள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் மக்கள் நீதிமன்றம்- ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு…

கோவை: கோவையில் நடைபெற்ற மக்கள் நீதி மன்ற விசாரணையில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி இன்று லோக் அதாலத் எனப்படும் மக்கள்...

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.