கோவையில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான்!

கோவையில்: பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக கோவையில் நடைபெற்ற மரத்தான் போட்டியில் 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

ஜெம் கேன்சர் சென்டர் மற்றும் ஜெம் அறக்கட்டளை இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கோவை மகளிர் மாரத்தான் 2026 போட்டி நடத்தியது.

இதில், கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டிக்கு, LC-85 அமைப்பினரின் ஏற்பட்டில் மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 100 பேர் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியை ஜெம் மருத்துவமனைத் தலைவர் பழனிவேலு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரவீன்ராஜ், மாநகர காவல் ஆணையர் கண்ணன், எம்எல்ஏ வானதி ஆகியோர் கொடியசைத்து மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

Advertisement
gem Women marathon Coimbatore event

“கடந்தாண்டைவிட இந்தாண்டு அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அளவில் கோவையில் தான்ெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் புற்றுநோய் செலவுக்கு பயன்படுத்தப்படும்” என்று பிரவீன் ராஜ் கூறினார்.

இதில் 21 கி.மீ (அரை மாரத்தான்) பிரிவில் 18-39 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஐஸ்வர்யா முதலிடம் பிடித்தார். 40-49 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் ரேணுகா, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் ரமா முதலிடம் பிடித்தனர்.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

APK பைலை கிளிக் செய்ததால் ரூ.5.38 லட்சம் பறிபோனது… கோவையில் அதிர்ச்சி!

கோவையில் வங்கி பெயரில் வந்த APK பைலை கிளிக் செய்த தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5.38 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...