கோவையில் கொழுந்துவிட்டு எரிந்த ஸ்கார்பியோ கார்- VIDEO

கோவை: கோவையில் நடு ரோட்டில் ஸ்கார்பியோ கார் ஒன்று திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆலந்துறையில் இருந்து பேரூர் செல்லும் சாலையில் ஸ்கார்பியோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் செல்லப்பம்பாளையம் அருகே வந்தபோது, திடீரென இன்ஜினில் இருந்து புகை வெளியேறியது.

இதனால் வாகன ஓட்டி உடனடியாக காரை சாலையோரத்தில் நிறுத்தினார். அப்போது அந்த காரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கி சென்றதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் பழங்குடியின மக்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவியல் ரீதியான தேனீ வளர்ப்பு பயிற்சி மூலம் தமிழக பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புது தில்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும்...

Video

கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.