கோவையில் 141 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்…

கோவை: கோவையில் 141 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோவையில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 141 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் வழங்கினார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் 141 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் மற்றும் தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மடக்கு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், ஊன்றுகோல், கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு கோல்கள், காதொலிக்கருவி, பிரெய்லி கைக்கடிகாரம் உருப்பெருக்கி பிரெய்லி ரீடர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

Advertisement

அதனடிப்படையில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 137 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1,01,800 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.7000 மதிப்பீட்டில் கமோட் சக்கர நாற்காலிகள்(commode Wheelchair) என மொத்தம் 141 பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவன்- பொதுத்தேர்வை தவறவிட்ட சோகம்…

கோவை: ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவன் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறை பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த மாணிக்கராஜ் என்பவர் தனது மகனை பள்ளி...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.