குழந்தைகளை மறக்காமல் அழைத்துச் செல்லுங்கள்; கோவையில் இலக்கியப் பூங்கா!

கோவை: கோவையில் தமிழ்ச் சங்க இலக்கியப் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

Advertisement

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் மத்தியில் பொழுது போக்கிற்காகவும் அதே சமயம் தமிழ்ப் பற்று மற்றும் அறிவியல் விஷயங்களை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு முன்னெடுப்புகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் காந்திபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட செம்மொழி பூங்கா பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அங்கு வெறும் பூச்செடிகள் மரங்கள் மட்டுமல்லாமல் கடையேழு வள்ளல்களின் கொடை சிற்பங்கள் ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட காளப்பட்டி சாலையில், செசி அவன்யூ பகுதியில் தனியார் பங்களிப்புடன் தமிழ்ச் சங்க இலக்கியப் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவினை கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கிழக்கு மண்டல தலைவர் லட்குமி இளஞ்செல்வி உதவி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பூங்காவில் தமிழர்களின் பண்டைய கால வாழ்வியல், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் ஆகியவை கலைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

தமிழர்களின் வாழ்வியல் முறையின் அடிப்படை அறிவை குழந்தைகளிடையே ஏற்படுத்தும் இந்த பூங்காவிற்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள் வாசகர்களே…

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...