கோவையில் நடைபெற்ற My Bharat தமிழ்நாடு நிகழ்ச்சி…

கோவை: கோவையில் My Bharat தமிழ்நாடு Interstate youth exchange நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்ற நடைபெற்றது.

கோவை குரும்பப்பாளையம் பகுதியில் உள்ள கே.வி மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 9 மாணவிகள் உட்பட 32 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

இவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத், கம்மம், மெகபூப் நகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கடந்த 9ம் தேதி முதல் இன்று வரை 5 நாட்கள் கோவையில் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் ஆன்மீக தலங்களுக்கும், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்கும் மாணவர்கள் சென்று அப்பகுதியின் கலாச்சாரம், உணவு முறை ஆகியவை குறித்து தெரிந்து கொண்டனர். மேலும், கே.வி மேலாண்மை கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு Personality development பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் கோயம்புத்தூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரசாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மை பாரத் கோயம்புத்தூர் அலுவலகத்தின் மாவட்ட இளைஞர் அலுவலர் ஜோயல் பிரபாகர், கே.வி மேலாண்மை கல்லூரியின் இயக்குனர் குமார் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவில் அரசின் பங்கேற்பு சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் கலாச்சாரம் சார்ந்த நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.