கேஸ் சிலிண்டருக்கு இறுதி சடங்கு- கருப்பு பலூன்- கோவையில் நூதன ஆர்ப்பாட்டம்…

கோவை: கேஸ் சிலிண்டருக்கு இறுதிச்சடங்கு நடத்தி கோவையில் தந்தை பெரியார் திராவிடர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

Advertisement

வளைகுடா நாடுகளில் தற்போது நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் பல்வேறு டீக்கடைகள் உணவகங்கள் மூடப்படுகின்றன.

கோவையிலும் பல்வேறு உணவகங்கள் உணவு வகைகளை குறைத்துள்ளது. கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு வரும் அளவிற்கு இருப்பு வைக்காமல் மத்திய மோடி அரசு அலட்சியம் காட்டியதாகவும் அதனை கண்டிக்கும் விதமாகவும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டரை ஸ்ட்ரக்சரில் வைத்து மாலை அணிவித்து இறுதி சடங்கு நடைபெறுவது போன்று நூதன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த கேஸ் சிலிண்டர் படங்களுக்கு கருப்பு பலூன் கட்டப்பட்டு வானத்தில் பறக்க விடப்பட்டது.

Advertisement

இது குறித்து பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், அடுப்பு அமைகின்ற நிலை மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது நடைபெற்று வரும் போரை மௌனமாக ஆதரித்து வருவதாகவும் காரணமாகவும் டிரம்ப்க்கு ஆதரவு அளித்ததன் காரணமாகவும் எளிய மக்கள் எரிவாயு தட்டுப்பாட்டில் சிக்கி உள்ளதாக தெரிவித்தார்.

பொருளாதாரக் கொள்கை இல்லாத காரணத்தினாலும் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஆதரித்ததன் காரணமாகவும் இந்திய மக்களும் சேர்ந்து வதைபடும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

Advertisement

பண மதிப்பிழப்பு செய்யும்பொழுது பலரும் உயிரிழந்தார்கள் என்று தெரிவித்த அவர் அதே நிலை தான் தற்பொழுது மோடி அரசால் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். 56 இன்ச் காவலராக தன்னை கூறிக் கொண்டும் வல்லரசு நாடாக மாற்றுவேன் என்று கூறிக் கொண்டும் உள்ளார் பிரதமர் மோடி என்று குறிப்பிட்ட அவர் இந்திய எல்லைக்குள்ளேயே ஈரான் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்திய கடல் எல்லைகள் பாதுகாப்பின்றி இருப்பதாக தெரிவித்தார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...