பாகிஸ்தானை வென்ற கோவை ராணுவ வீரர் உயிரிழந்தார்!

கோவை: பாகிஸ்தான் போர் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கோவையை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் உயிரிழந்தார்.

Advertisement

1971-ல் பாகிஸ்தானுடனான போர் வெற்றியில் முக்கிய பங்காற்றிய ‘பிரிகேடியர்’ வி.ஆர்.சுவாமிநாதன் மறைவிற்கு ராணுவத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

1971-ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் பங்கேற்று இந்திய ராணுவத்தின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் பிரிகேடியர் வி.ஆர்.சுவாமிநாதன் (வயது 94) நேற்று கோவையில் காலமானார்.

1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த வங்கதேச விடுதலைப் போரின்போது, 22-வது மராத்தா லைட் காலாட்படையின் கட்டளை அதிகாரியாக இருந்து ஹில்லி என்ற போர்க்களத்தில் தனது படையை வழிநடத்தியவர் வி.ஆர்.சுவாமிநாதன். ஹில்லி போர்க்களத்தில் பாகிஸ்தான் படையைச் தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்தவர்.

Advertisement

போர்க்களத்தில் தோல்வியை தழுவிய ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள், வி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் சரணடைந்தனர். அந்த வகையில் போர் கதாநாயகராக அறியப்படுபவர் இவர்.

வங்கதேச விடுதலைப் போருக்கு முன்பாக 1961 கோவா விடுதலையிலும், நாகாலாந்து கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் பங்கேற்றவர் வி.ஆர்.சுவாமிநாதன். ராணுவத்தில் பிரிகேடியர் நிலைக்கு உயர்ந்த இவர் 1986-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

Advertisement

வயது முதிர்வு காரணமாக மூச்சு விடுவதில் சிரமத்தைச் சந்தித்து வந்த வி.ஆர்.சுவாமிநாதன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மார்ச் 14 அன்று அவர் காலமானார். அவரது மனைவி வசந்தி ஏற்கெனவே காலமாகிவிட்டார்.

இந்த தம்பதியருக்கு தரங்கிணி, தீபா, ஜோதி ஆகிய மூன்று மகள்கள். மூன்றாவது மகள் இறந்துவிட்டார். அருண், சுரேஷ், சேஷாத்ரி ஆகிய மூன்று மருமகன்களும் பேரக்குழந்தைகளும் இவருக்கு உள்ளனர். வி.ஆர். சுவாமிநாதனின் இறுதிச் சடங்குகள் செல்வபுரம் பகுதியில் உள்ள மின்மயானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் குடும்பத்தினர், பாதுகாப்பு படையினர் மற்றும் மூத்த ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்! பழைய ரீல்ஸின் ஆடியோவை இனி மாற்றலாம்

இன்ஸ்டாகிராம் புதிய 'Replace Audio' அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பழைய ரீல்ஸ் மற்றும் வீடியோ பதிவுகளை நீக்காமல், அதிலுள்ள ஆடியோவை மட்டும் மாற்றும் வசதி பயனாளர்களுக்கு கிடைத்துள்ளது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...