கோவை: மாவட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடி பாதுகாப்பான முறையில் பராமரிக்க மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவையின் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சில கிணறுகள் கைவிடப்பட்டும், சில உபயோகத்திலும் உள்ளன.
ஆனால் சிலர் அதனை கண்டு கொள்ளாமல் அப்படியே திறந்த நிலையில் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அதில் குழந்தைகள், விலங்குகள் விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
Click here to Read News கோவையில் வீட்டில் விபசாரம்: அழகி, மூதாட்டி உட்பட 3 பேர் கைது!
இந்த நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆழ்துளை கிணறுகளை வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது தீயணைப்பு துறையினரும் ஆழ்துளை கிணறுகளை கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 14 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கும், அவர்கள் எல்லையில் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்து, ஆழ்துளை கிணறுகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Click here to read news ரம்ஜான் பண்டிகை – கோவையில் 5000 பேருக்கு இலவச பிரியாணி…
மேலும், மாதம் தோறும் ஆழ்துளை கிணறுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் அபாயகராமன நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் குறித்து மாவட்ட தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

