தன்னை பாவப்பட்ட ஜீவன் போல் காட்டி கோவையில் திருட்டு!

கோவை: கோவையில் தன்னை பாவப்பட்ட நபர் போல் காட்டி, காப்பகத்தில் தங்கி பைக் திருட்டி ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Advertisement

சுந்தராபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (48). இவர் ஆர் எஸ் புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 18ம் தேதி ஸ்கூட்டரில் வழக்கம் போல பணிக்கு வந்த அவர் மருத்துவமனை முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி உள்ளே சென்றார்.

மாலை பணி முடிந்து வெளியே வந்து பார்த்தபோது தனது ஸ்கூட்டர் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தும் ஸ்கூட்டர் கிடைக்காததால் கஜேந்திரன் போலீசில் புகார் அளித்தார்.

பெற்றோர்களே குழந்தைகள் முன் சண்டையிடாதீர்… கோவையில் சோக சம்பவம்!

Advertisement

இதேபோல ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன் (31). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 18ம் தேதி தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது பைக் திருட்டுப் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மோகன் ஆர்எஸ் போலீசில் புகார் அளித்தார்.

இருவரது புகாரின் பேரில் ஆர்எஸ் புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருட்டு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

Advertisement

அதில் பதிவாகி இருந்த நபரின் அடையாளத்தை வைத்து போலீசார் தேடினர். அதில் பைக் மற்றும் ஸ்கூட்டரை திருடியது வேலூர் சிக்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (44) என்பது தெரியவந்தது.

Click here to read news அதிர்ச்சி: கோவையில் ஆம்புலன்சில் வந்த கஞ்சா, போதை மாத்திரைகள்!

மேலும், இவர் வேலூரில் இருந்து குடும்பத்துடன் கோவை வந்து தனது 3 குழந்தைகளை காட்டி தனியார் காப்பகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். காப்பகத்தில் தங்கி தன்னை பரிதாபமாக காட்டிக் கொண்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது சில திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் தினேஷ் குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர் திருடி வைத்திருந்த பைக் மற்றும் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Click here to read- நன்றாக தூங்க வேண்டுமா…!

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை அருகே வீட்டில் 6 அடி உயர கஞ்சா செடி வளர்ப்பு; வடமாநிலத் தொழிலாளி கைது

கோவை பொள்ளாச்சி அருகே வீட்டின் அருகில் சுமார் 6 அடி உயர கஞ்சா செடி வளர்த்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்து, செடியை பறிமுதல் செய்தனர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.