கோவை: கேஸ் தட்டுப்பாடு காரணமாக கோவையில் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சில உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், பல்வேறு உணவகங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே கோவையில் குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
எல்பிஜி (LPG) தட்டுப்பாடு காரணமாக விடுதி வசதி தற்காலிகமாக செயல்படாது. இதனால், விடுதியில் தங்கும் மாணவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஹாஸ்டலுக்கு வர தேவையில்லை.
Click here to read news பெற்றோர்களே குழந்தைகள் முன் சண்டையிடாதீர்… கோவையில் சோக சம்பவம்!
மேலும், மார்ச் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ள CIA-II தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், இணையவழியில் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விடுதி மாணவர்கள் மற்றும் டே ஸ்காலர் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே விதிமுறைகள் பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக உணவுத்துறை பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது கல்வித் துறையிலும் பாதிப்பு ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Click here to Read News கோவையில் வீட்டில் விபசாரம்: அழகி, மூதாட்டி உட்பட 3 பேர் கைது!

