சுவர் இடிந்து விழுந்து தாய், மகன் படுகாயம்; வீட்டு உரிமையாளர், காண்டிராக்டர் மீது வழக்கு

கோவை: கோவை உக்கடத்தில் கட்டிடப் பணி நடைபெற்ற வீட்டின் சுவர் இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்ததில் தாய், மகன் படுகாயமடைந்தனர். இதில் மகன் உயிரிழந்தார்.

கோவை உக்கடம் கோட்டை, பிஷப் சேவியர் காலனி, சாமியார் புதிய வீதியைச் சேர்ந்தவர் டயானா (41). இவர் தனது தாய் பவுலின் லூசியா (74), சகோதரர் மார்ட்டின் மரியா ஆண்டனி (46) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இவர்களது வீட்டின் அருகில் வசித்து வருபவர் ஆரோக்கிய பேபி (40). இவர் தனது வீட்டில் கட்டிடப் பணிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

Read news : கோடையில் கொட்டும் முடி – எளிய தீர்வு…!

கடந்த 26ஆம் தேதி காலை வழக்கம்போல் கட்டிடப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென ஆரோக்கிய பேபியின் வீட்டின் சுவர் சரிந்து, டயானாவின் வீட்டின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மார்ட்டின் மரியா ஆண்டனி மற்றும் சமையல் செய்து கொண்டிருந்த பவுலின் லூசியா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து, இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Read news: கடன் வாங்கியவரிடம் இனி உருட்டல் மிரட்டல் இனி நடக்காது…!

இந்த நிலையில், படுகாயமடைந்த மார்ட்டின் மரியா ஆண்டனி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டயானா உக்கடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் ஆரோக்கிய பேபி மற்றும் கட்டிடப் பணிக்கான காண்டிராக்டர் ரமேஷ் (45) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் ‘Jungle Jam’ கொண்டாட்டம்; குழந்தைகளே ரெடியா இருங்க!

கோவையில் குழந்தைகளுக்கான ‘Jungle Jam’ நிகழ்ச்சி ஏப்ரல் 17 முதல் ஃபன் ரிபப்ளிக் மாலில் தொடங்கி, கற்றலும் விளையாட்டும் இணைந்த அனுபவத்தை வழங்குகிறது.

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...