கோவை:கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்சவுத்ரி (35). இவர் கோவை பெரியநாயக்கன் பாளையம் பெட்டதாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராகப் பணியாற்றி வந்தவர். இவரது மனைவி அர்ச்சனாதேவி (35). இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றி வந்த பீகாரை சேர்ந்த முகேஷ் சஹானி (34) என்பவருக்கும், அர்ச்சனாதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
Read news : சுவர் இடிந்து விழுந்து தாய், மகன் படுகாயம்; வீட்டு உரிமையாளர், காண்டிராக்டர் மீது வழக்கு
இதனால் அர்ச்சனாதேவி கணவரைப் பிரிந்து முகேஷ் சஹானியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சஞ்சய்சவுத்ரி தனது மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்துள்ளார். இதனை அறிந்து முகேஷ் சஹானி கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த சஞ்சய்சவுத்ரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து முகேஷ் சஹானி தனது நண்பர் கரூரைச் சேர்ந்த கோவை சாமி செட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வந்த தேவா என்கிற குபேந்திரன் (30) என்பவரை வரவழைத்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி இரவு, சஞ்சய்சவுத்ரியை, மது அருந்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கல்லூரி மைதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
Read news: கடன் வாங்கியவரிடம் இனி உருட்டல் மிரட்டல் இனி நடக்காது…!
அங்கு இருவரும் சேர்ந்து சஞ்சய்சவுத்ரியை, தாக்கி, கழுத்தை நெரித்துப் கொலை செய்தனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து முகேஷ் சஹானி மற்றும் குபேந்திரனை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கோவையில் உள்ள முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கினை விசாரித்த நீதிபதி பாபுலால் நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட முகேஷ் சஹானி மற்றும் குபேந்திரன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 4,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

