கொடுத்த கடனை திருப்பி கேட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது தாக்குதல்

கோவை:கோவையில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்மீது தாக்குதல் நடத்திய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலனி கே.கே. புதூரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (60). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (40) என்பவருக்கு ரூ.3 லட்சம் கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது.

கோவையில் சாலையில் ஓடித்திரியும் குட்டி யானையை தாயுடன் சேர்க்க போராட்டம்! வீடியோ காட்சிகள்

Advertisement

ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட வினோத்குமார் இரண்டு ஆண்டுகளாகியும் திருப்பி செலுத்தவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு நிலவி வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சாய்பாபா காலனி அழகேசன் சாலையில் வினோத்குமார் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ரவிக்குமார், தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவையில் ஜூனியர் ஹாக்கி போட்டி துவங்கியது…

இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார், தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பீர் பாட்டிலால் ரவிக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரவிக்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சாய்பாபா காலனி போலீசார் வினோத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...