கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வெயிலில் செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அலர்ஜி ஏற்பட்டுகிறது.
கோவையைப் பொறுத்த வரையில் தினமும் சுமார் 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு வெப்பமும், புழுக்கமும் அதிகரித்துள்ளது.

இதனிடையே ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைமை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இனி ஜிடி மேம்பாலத்தில் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; ஸ்மார்ட் கண்காணிப்பு துவக்கம்
அந்த வகையில், ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்காக பிரத்தியேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு 10 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஓ.ஆர்.எஸ் கார்னரும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வார்டில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கொடுத்த கடனை திருப்பி கேட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது தாக்குதல்
கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வரவில்லை என்றபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு வழிகாட்டுதலின்படி இந்த சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தெரிவித்தார்.


