இன்று உங்கள் போன் அலறப்போகிறது… பயப்படாதீங்க!

டெல்லி: பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனடியாக எச்சரிக்கும் வகையில், இன்று மத்திய அரசு சோதனை நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

இந்தியாவில் பேரிடர் நேரங்களில் பொதுமக்களை ஒருங்கிணைத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

இதன் ஒரு பகுதியாக, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Read news கோவையில் வீட்டில் புகுந்த 7 அடி நீளமான சாரை பாம்பு; ஷூ ரேக்கிற்குள் பதுங்கியதால் பீதி – பாம்பு பிடி வீரர் மீட்பு!

இந்த நிகழ்ச்சிகள் மூலம் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தப்பிக்க வேண்டும், நிலநடுக்கம் ஏற்பட்டால் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தங்களை மற்றும் பிறரை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Read news வண்டி ஓட்டிப் பார்க்கட்டுமா? கோவையில் உதவியரிடம் கைவரிசை; வீடியோ

பேரிடர் காலங்களில், குறிப்பாக வெள்ளம், நிலநடுக்கம் போன்ற அவசர சூழ்நிலைகளில் பொதுமக்களை உடனடியாக எச்சரிக்க ‘செல் பிராட்காஸ்ட்’ (Cell Broadcast) என்ற எச்சரிக்கை முறையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பயன்படுத்துகிறது.

Advertisement

Read news வண்டி ஓட்டிப் பார்க்கட்டுமா? கோவையில் உதவியரிடம் கைவரிசை; வீடியோ

இந்த சோதனையின் போது, அனைவரின் செல்போன்களிலும் அதிக சத்தத்துடன் அலர்ட் செய்தி வரும். இதன் மூலம் எந்தவித ஆபத்தும் இல்லை; இது ஒரு சோதனை மட்டுமே.

அதன்படி, இன்று நாடு முழுவதும் இந்த செல் பிராட்காஸ்ட் எச்சரிக்கை அமைப்பு சோதனை செய்யப்படுகிறது.

எனவே, இன்று உங்கள் செல்போன்களுக்கு திடீரென அதிக சத்தத்துடன் ஒரு மெசேஜ் வந்தால் அச்சப்பட தேவையில்லை.

இந்த சோதனை முறை நம்மை பாதுகாப்பதற்காகவே என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...