கோவையில் குப்பை கொட்டிய தகராறு; மூதாட்டி வெட்டிக்கொ*!

கோவை: ஆலாந்துறை அருகே குப்பை கொட்டிய தகராறில் மூதாட்டி ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை ஆலாந்துறை அடுத்த காருண்யா நகர் அருகே உள்ள நல்லூர்வயல் சப்பாணிமடை பகுதியை சேர்ந்தவர் ஜெசி (72). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் நோபிள் வாட்சன் (47).

இருவருக்கும் வீட்டின் முன்பு குப்பை கொட்டுவது தொடர்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.

Read news: கோவையில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Advertisement

இந்நிலையில், இன்று காலை ஜெசி, நோபிள் வாட்சன் வீட்டின் முன்பு குப்பை கொட்டியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நோபிள் வாட்சன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெசியின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

தகவலறிந்து வந்த காருண்யா நகர் போலீசார், ஜெசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read news: கோவை அரசு மருத்துவமனை அருகே தலையில் கல்லை போட்டு முதியவர் கொ* !

மேலும், தப்பியோட முயன்ற நோபிள் வாட்சனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பை கொட்டிய தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.