தென்மேற்கு பருவமழை எதிரொலி… வெள்ளியங்கிரி தரிசனத்திற்கு தற்காலிக தடை

கோவை:தென்மேற்கு பருவமழை காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, வெள்ளியங்கிரி மலைக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, மலைப்பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பருவமழை தாக்கம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வனத்துறை எச்சரித்துள்ளது.

இதனால், மலைப்பாதைகள் வழுக்கும் அபாயம் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மே 13ஆம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலை ஏற தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தடை உத்தரவை மீறி யாரும் மலை ஏற முயற்சிக்க கூடாது.
பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.

இதனால், நாளை முதல் தரிசனத்திற்காக வரத் திட்டமிட்டிருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், பக்தர்களின் உயிர் பாதுகாப்பை முன்னிறுத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பேட்மின்டனில் வெற்றிக்கொடி நாட்டி சீனா செல்லும் கோவை வெங்கீஸ் பயிற்சி மைய மாணவி!

சேலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அனு ஸ்ரீ, கோவை வெங்கீஸ் பேட்மின்டன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, சீனாவில் நடைபெறும் ஏசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...