வளர்ச்சி திட்ட பணிகளை கோவை மேயர் ரங்கநாயகி ஆய்வு

கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ரங்கநாயகி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 29வது வார்டுக்குட்பட்ட கணபதி புதூர் முதல் வீதியில், மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியும்,

வி.என்.எஸ். நகர் பகுதியில் மாநகராட்சி நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் திரும்பக் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதேபோல், கொரத்தோட்டம் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் திரும்பக் கட்டும் பணி, கணபதி கார்டன் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் ஆய்வகம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி,

Advertisement

வி.என்.எஸ். நகர் முதல் சின்னசாமி நகர் வரையிலும் மற்றும் வி.என்.எஸ். நகர் இடையே கால்வாயின் குறுக்கேயும் ரூ.39.70 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை நேற்று மேயர் ரங்கநாயகி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...