தன்னை சந்திக்க வருபவர்கள் இதனை வழங்குகள்- அமைச்சர் விக்னேஷ் வேண்டுகோள்…

கோவை: தன்னை சந்திக்க வருபவர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சர் விக்னேஷ்.

Advertisement

தன்னை சந்திக்க வருபவர்கள் நோட்டு, பேனா போன்ற எழுது பொருட்களை வழங்குமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சரும் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான விக்னேஷ் தன்னைச் சந்திக்க வருபவர்கள் நோட்டு பேனா பென்சில் போன்ற பொருட்களை வழங்குமாறு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தன்னை சந்திக்க வருபவர்கள் மாலை சால்வை பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்களை தவிர்த்து அதற்கு பதிலாக நோட்டு பேனா பென்சில் மற்றும் எழுது பொருட்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement

நீங்கள் வழங்கும் இந்த பொருட்கள் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பேரூதவியாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

விபத்துகளைத் தவிர்க்க விழிப்புணர்வு; வடவள்ளியில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து முகாம்

கோவை வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை விதிகளைப் பின்பற்றுதல் மற்றும் விபத்து நேரங்களில் உடனடி உதவி வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...