கோவை: கோவையில் 13 வயது சிறுமியிடம் ஆபாசமாக பேசிய தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கோவையைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டருகே தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர், சிறுமியின் உடல் அமைப்பை வர்ணித்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது பெற்றோர் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோவை திருச்சி சாலையைச் சேர்ந்த தொழிலாளி ஜான் பீட்டர் (53) என்பவர் சிறுமியிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஜான் பீட்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



