பிரதமர் மோடி பாஜக தலைவர்கள் புகைப்படங்கள் இல்லாமல் கோவையில் அண்ணாமலைக்கு போஸ்டர்

கோவை: பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் புகைப்படங்கள் இல்லாமல் அண்ணாமலைக்கு கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஜூன் 4ம் தேதி பிறந்தநாள் அன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை முக்கியமான அறிவிப்பை அறிவிப்பார் என்று கூறப்படும் நிலையில் கோவையில் தலைவா! தரணி ஆள வா..! என்று அண்ணாமலைக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஜூன் 4ம் தேதி அவரது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் அரசியல் சார்ந்த முக்கிய அறிவிப்பை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் உலாவி வருகிறது.

Advertisement

இந்நிலையில் கோவையில் உத்தம் அறக்கட்டளையின் தலைவரும் கோவை பாஜக முன்னாள் மாவட்ட தலைவருமான பாலாஜி உத்தமராமசாமி கோவை மாநகரில் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில் அண்ணாமலையின் பிறந்தநாள் தேதியை குறிப்பிட்டு “தலைவா! தரணி ஆள வா..!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதில் பாஜகவின் தாமரை சின்னமோ பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்களின் புகைப்படமோ இடம்பெறவில்லை.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி- உற்சாகமடைந்த மக்கள்…

கோவை: பல மாதங்கள் கழித்து நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். கோவையில் பல மாதங்கள் கழித்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.