வீரகேரளத்தில் கொடூர விபத்து; அலறி துடித்த மனைவி, தப்பியோடிய கார்! Video

கோவை: கோவை வீரகேரளம் பிரதான சாலையில், மணி (53) என்பவர் சாலையோரத்தில் தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார்.

Advertisement

நேற்று அவர் தனது கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது.

மோதிய வேகம் அதிகமாக இருந்ததால், மணி தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

எனினும், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

Advertisement

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் அப்பகுதி பொதுமக்கள், பலத்த காயமடைந்த மணியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அருகில் உள்ள வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளன.

Video

அதில், அதிவேகமாக வந்த கார் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்வது பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கார் மற்றும் அதன் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...