முதல்வர் விஜய்க்கு மறதியா? கோவையில் வல்லாரைக் கீரை அனுப்ப முயன்றவர்கள் கைது!

கோவை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்த முதலமைச்சர் விஜய்க்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்ற தமிழ் புலிகள் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் விஜய், தமிழக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

இதனிடையே த.வெ.க. ஆட்சி அமைந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் விஜய் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் எழுந்து வருகிறது.

இந்த சூழலில், விஜய்க்கு அவரது தேர்தல் அறிக்கைகளை நினைவூட்டும் விதமாக, தமிழ் புலிகள் கட்சியினர் இன்று அவருக்கு வல்லாரை கீரை அனுப்ப வந்தனர்.

Advertisement

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்திற்கு வந்த அவர்கள், தபால் மூலமாக முதலமைச்சருக்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்றனர்.

முன்னதாக, அவர்களைத் தடுக்காத போலீசார், உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கீரை அனுப்ப வந்த மூவரை கைது செய்தனர்.

இதுகுறித்து, தமிழ் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இளவேனில் கூறுகையில்,

பெண்களுக்கு மாதம் ரூ.2,500, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் விஜய் கொடுத்திருந்தார்.

ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் அவர் அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை.

பொதுவாகவே ஆட்சி அமைக்கும் முதலமைச்சர், ஆட்சி அதிகாரத்திற்கு வந்த உடனேயே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவார்கள். ஆனால் இங்கு அப்படி எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

இதனை செயல்படுத்த மறந்த முதலமைச்சர் விஜய்க்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்றோம். ஆனால் போலீசார் இதனை தடுத்து நிறுத்துகின்றனர்.

இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் மூன்று மாதங்களில் த.வெ.க. ஆட்சி கவிழும் என்றே தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளும் இதனை பின்பற்ற வேண்டும்- கோவை மாவட்ட ஆட்சியர்…

கோவை: கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை அனைத்து பள்ளிகளிலும் எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து...

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.