பருவமழை முன்னெச்சரிக்கை- கோவையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் தொடக்கம்…

கோவை: பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு கோவையில் ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.

Advertisement

பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு அதனை எதிர்கொள்ளும் விதமாக கோவை மாநகராட்சியில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் பொழுது ஆங்காங்கே மழை நீர் தேங்கி விடுவதாலும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதாலும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

அதனை தடுக்கும் விதமாக அனைத்து நீர் நிலைகளையும் சுத்தப்படுத்தி அதற்கான பாதைகளை உருவாக்குவதற்கு அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவை வலாங்குளம் பகுதியில் படர்ந்து கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளானது துவங்கி உள்ளது. இயந்திரங்களைக் கொண்டு அனைத்து ஆகாயத்தாமரைகளும் அகற்றப்பட்டு வருகிறது மேலும் குளங்களில் உள்ள குப்பைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து இந்த குளத்திற்கு வந்தடையும் நீர் வழித்தடங்கள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

Advertisement

வலாங்குளத்தில் ஜூலை மாதம் வெளிநாட்டு பறவைகளும் அதிகமாக வரக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் அதிர்ச்சி… தந்தையை பீர் பாட்டிலால் தாக்கிய மகன் சிறையில் அடைப்பு!

குடிப்பழக்கத்தை கண்டித்த தந்தையை பீர் பாட்டிலால் தாக்கி காயப்படுத்திய 22 வயது மகனை கோவை பெரிய கடைவீதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...