பிளஸ்-1 மாணவர்களுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பிய ஆங்கில ஆசிரியர் கைது; கோவையில் பரபரப்பு !

கோவை: மாணவர்களுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (35), கோவையில் தங்கி காளப்பட்டி (Kalapatti) பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், பிளஸ்-1 மாணவர்களின் செல்போன் எண்களுக்கு ஆசிரியர் பாபு ஆபாசப் படங்களை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாணவர் ஒருவரின் பெற்றோர் கவனித்து அதிர்ச்சியடைந்த நிலையில், மற்ற மாணவர்களின் பெற்றோரிடமும் விசாரித்துள்ளனர்.

Also Read:வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை; கோவையில் சாலை சேதம் பரபரப்பு

Advertisement

அப்போது, மேலும் சில மாணவர்களுக்கும் இதேபோன்று ஆபாசப் படங்கள் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், ராமநாதபுரம் கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Also read: கால்நடைகளுக்கு அடையாள எண் கட்டாயம்- கோவை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…

மாணவர்களுக்கு ஒழுங்கற்ற மற்றும் ஆபாச உள்ளடக்கங்களை அனுப்பியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு; கண் தானத்தில் 76 ஆயிரம் பேரை இணைப்பதே இலக்கு – துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

கோவை ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டு நாடு முழுவதும் 76 ஆயிரம் பேரிடம் கண் தான உறுதிமொழி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...