கோவை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள்- பள்ளி வாகனம் விபத்து…

கோவை: தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் பள்ளி வாகனம் விபத்திற்குள்ளானதில் நல்வாய்ப்பாக பள்ளி குழந்தைகள், ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

Advertisement

கோவை மாவட்டம் கணுவாய்- துடியலூர் சாலையில் AVANI PUBLIC பள்ளி தனியார் இயங்கி வருகிறது. வழக்கம் போல் பள்ளி முடிந்து குழந்தைகளை ஏற்றி கொண்டு பள்ளி வாகனம் வரும் போது தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் எதிரே வந்ததாக தெரிகிறது. இளைஞர்கள் மீது மோதிவிட கூடாது என்பதற்காக பள்ளி வாகனத்தை ஓட்டுனர் திருப்பி உள்ளார்.

அதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பள்ளி வாகனம் அருகில் இருந்த மின்கம்பம் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள், ஓட்டுனர், அந்த இளைஞர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

பின்னர் அருகில் இருந்தவர்கள் குழந்தைகளை வாகனத்தில் இருந்து வெளியேற்றி அப்பள்ளிக்கு தகவல் அளித்தனர். பின்னர் பள்ளியில் இருந்து மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

இது குறித்து தடாகம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் பள்ளி வாகனம் விபத்து: மின்கம்பத்தில் மோதி நின்ற பேருந்து; குழந்தைகள் உயிர் தப்பினர்

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...