கோவையில் கஞ்சா மற்றும் கேரளா லாட்டரி விற்ற 5 பேர் கைது: கிலோ கணக்கில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

கோவை: கோவை மாநகர காவல்துறை ஆணையரின் உத்தரவின் பேரில், நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரூப்சந்த் (வயது 59). இவர் தடாகம் ரோடு சமூக கிளப் அருகே நின்று கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை கள்ளத்தனமாக விற்றுக் கொண்டிருந்தார்.

Advertisement

ஆர்.எஸ்.புரம் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா அவரை கைது செய்து, அவரிடமிருந்த 314 கேரளா லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்தார்.

இதேபோல் கோவை ரயில் நிலையம் மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். ரேஸ்கோர்ஸ் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற கேரளாவைச் சேர்ந்த ஏ.ஆனந்து (26) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 2 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும், கோவை ரயில் சந்திப்பு பிளாட்பாரம் எண் 3 அருகே பெரும் தொகையாக கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் தாஸ் (31), ஆரிப் மண்டல் (28) ஆகிய இரு வடமாநில வாலிபர்களைப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் இன்று சிறப்பு குறைதீர் முகாம்- எங்கெங்கு என்ற விவரங்கள் இதோ..!

கோவை: இன்று கோவையில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...