கோவை: புதிய தமிழகம் நடத்த உள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்பது கூட்டம் நடைபெறும் போதுதான் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகத்தின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மேகதாது அணையைப் பொறுத்தவரை, ஒரு செங்கலைக்கூட வைக்க தமிழக அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார். அந்த நேரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நிச்சயமாக மேற்கொள்வார்.
ஒரு இயக்கம் எது வேண்டுமானாலும் செய்யலாம். புதிய தமிழகத்தின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும்.
ஒவ்வொரு இயக்கமும் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
பொதுமக்களின் பிரச்சினைக்காக நடைபெறும் அந்தக் கூட்டத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது அப்போதுதான் தெரியும்.
என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.





