கோவையில் 5 சுங்கச்சாவடிகள் மூடல்… உள்ளூர் வாசிகள் பாதிப்பு!

கோவை: நீலாம்பூர் பகுதியில் இருந்து மதுக்கரை வரை செல்லும் சேலம் – கொச்சின் நெடுஞ்சாலையில் 5 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டும் செயல்படத் தொடங்கியது.

கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக எல் & டி நிறுவனம் மூலம் 1999ம் ஆண்டு புறவழிச் சாலை அமைக்கப்பட்டது. நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு
இந்த புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

கடந்த 1999 முதல் 2029 வரை 30 ஆண்டுகளுக்கு சுங்க வசூல் செய்யும் உரிமம் எல் & டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து நீலம்பூரில் இருந்து மதுக்கரை வரை 6 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணமானது வசூலிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்ட நிலையில், நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை இடைப்பட்ட 28 கிலோமீட்டர் தூரம் மட்டும் இருவழிச் சாலையாகவே இருந்து வந்தது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் இந்த சாலையினை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

இது தொடர்பாக மத்திய அரசு எல் & டி நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, எல் & டி நிறுவனம் சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்தது.

இதனைத் தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 6 சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணத்தை வசூல் செய்து வந்தது. நீலாம்பூர் நெடுஞ்சாலையில் சாலையில் உள்ள ஆறு சுங்கச் சாவடிகளின் கட்டணத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூல் செய்து, மத்திய அரசின் கணக்கில் செலுத்தி வந்தது.

இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பின்படி புதிய சுங்க கட்டண வசூல் ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் நீலாம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள ஆறு சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூடிவிட்டு ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டும் செயல்படுத்துவது எனவும் , மதுக்கரை பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் மட்டும் கட்டண வசூலை, தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டண விதிகளின்படி தொடர இருப்பதாகவும் கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

அதன் படி நீலம்பூர் – மதுக்கரை இடையேயான 5 சுங்கச்சாவடிகள் முழுமையாக மூடப்பட்டு, மதுக்கரை சுங்கச்சாவடி செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் பல்வேறு பகுதிகளில் குறைக்கப்பட்டுள்ளது.

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

மேலும் புதிய கட்டணமாக கார், வேன், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.35 , இலகு ரக சரக்கு வாகனம், மினி பேருந்துக்கு ரூ.60 , லாரி, பேருந்துகளுக்கு ரூ.125 மற்றும் அடுத்தடுத்து வரும் கனரக வாகனங்களுக்கு முறையே ரூ.135, ரூ.195, ரூ.235 என சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் குறைவான தூரத்தைக் கடக்க ரூ.17 மட்டுமே செலுத்தி வந்த நிலையில், அவர்களும் ரூ.35 கட்டணம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், தினமும் நெடுஞ்சாலையில் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

விஜய் முதல்வர் தான், துணை முதல்வர் அல்ல- கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

கோவை: விஜய் முதல்வராகத்தான் வந்துள்ளாரே தவிர துணை முதல்வர் ஆவதற்கு இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.