கோவையில் பழங்குடியினருக்காக ITI சேர்க்கை கடைசி தேதி அறிவிப்பு- விண்ணப்பிக்கும் விவரங்கள் இதோ…

கோவை: ஆனைகட்டியில் உள்ள பழங்குடியினருக்கான ITI யில் சேர்க்கைக்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது) ஆனைகட்டியில் 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் ONLINE மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ONLINE முறையில் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 03.06.2026 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் Electrician Fitter MMV Wireman (இரண்டு வருட பயிற்சிக்காலம் மற்றும் Welder (ஓராண்டு பயிற்சிக்காலம்ஆகிய தொழிற்பிரிவுகள் (ஆண் பெண்) இருபாலருக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் (ஆதார் அட்டை PASSPORT SIZE புகைப்படம், அசல் சான்றிதழ்கள் ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்க்கை உதவி மையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

பயிற்சியில் சேர கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி (Wireman மற்றும் Welder) 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (Electrician, Fitter MMV ) பெற்றிருக்க வேண்டும்ஆண்களுக்கு வயது வரம்பு 14 வயது முதல் 40 வயது வரை மகளிர்க்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச BUS PASS. பிரதி மாதம் புதுமைப்பெண் பெண் திட்டத்தின்கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகை ரூ. 1000/-தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் ஆண் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகை ரூ. 1000/-மற்றும் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை ரூ. 750/-

விலையில்லா NIMI பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள் மற்றும் மிதிவண்டி வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் முன்னணி நிறுவனங்களில் CAMPUS INTERVIEW மூலம் வேலை வாய்ப்பு பெற்று வழங்கப்படும்.

மேலும் பயிற்சியாளர்களுக்கு இடவசதி பொறுத்து உணவு மற்றும் தங்கும் விடுதி இலவசமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.