கோவை: கோவை வேலைவாய்ப்பு வழிகாட்டுமைய பணிகள் இலவசம் என்றும் வலைதள விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும்மையம் வாயிலாக வேலை வாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்கீழ் எவ்வித கட்டணம் இன்றி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் புலனச்செய்தி (Whatsapp), பேஸ்புக், youtube, இன்ஸ்டாகிராம்களில் காணொளி வாயிலாக மேற்படி சேவைகளை கட்டணத்தின் அடிப்படையில் செய்து தருவதாக தெரிவித்த விளம்பரங்கள் உலாவருகின்றன.
எனவே பொதுமக்கள் எவரும் இதுபோன்ற போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி தனிப்பட்ட விவரங்களை அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாறவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த சேவைகளை கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாட்களில் நேரடியாக அணுகி எவ்வித கட்டணம் இன்றி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


