கோவை: துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்த நிலையில் ஒரு மணி நேரம் சோதனைக்கு பிறகு அது புரளி என தெரியவந்தது
கோவை துடியலூரில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று இமெயில் மூலம் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. அதில் பல்வேறு அமைப்புகள் பெயரில் பல்வேறு காரணங்களை வழியுறுத்தி மதியம் 1.15 மணியளவில் 13 குண்டுகள் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. மேலும் உள்ளே உள்ளவர்களை வெளியேற்றவும் என தெரிவித்து அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் கோயம்புத்தூரில் முஸ்லிம்கள் மீது UAPA வழக்குகள் பதிவு செய்யப்பட்டதன் மூலம் அவர்களை வெறும் வாக்கு வங்கிகளாக பயன்படுத்துதல், குடும்பத்தையும் முறைகேடாக பெற்ற நிதியையும் காப்பாற்றுவதற்காக ஆர் எஸ் எஸ் பிஜேபியுடன் ரகசிய கூட்டணி வைத்தல், என்கவுண்டர்கள் காவல்துறை நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படாத காவல்துறை மற்றும் கட்சித் தொண்டர்களின் கொடூரம் என்ற பெயரில் சொந்த குடி மக்களுக்கு எதிரான வன்முறை, தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் மீது தனிப்பட்ட கட்டுப்பாட்டை வைத்திருத்தல் மற்றும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தவறாக சித்தரித்தல், தமிழ்நாட்டிற்குள் இந்தியா முழுவதும் போதைப்பொருள் வர்த்தகத்தில் எம்கே ஸ்டாலின் குடும்பத்தினர் ஈடுபாட்டை வெளிப்படுத்துங்கள்.
ஆகையால் நாங்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக போர் பிரகடனம் செய்துள்ளோம் எங்கள் தலைவரின் அதிருப்தியை அடையாளமாக மார்ச் 31 முதல் தொடங்கும் சட்டபூர்வமாக மற்றதாக்கும் வாரத்தை நேரடி நடவடிக்கை வாரமாக அறிவித்துள்ளோம். கேரளாவில் உள்ள உங்கள் ஆர்டிஓ அலுவலகமே இன்று எங்கள் இலக்கு அனைத்து மனிதர்களையும் வெளியேற்றுங்கள் எங்களுக்கு சொத்து சேதம் மட்டுமே வேண்டும் என குறிப்பிடப்படுள்ளது.
இதையடுத்து ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கோவை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டி சோதனை செய்தும் கருவிகளைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
Read news:தொகுதி மாறிய நயினார்… இதுதான் காரணமா?
சுமார் 1 மணி நேர சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் இது வெகும் புரளி என தெரியவந்தது. மேலும் இதேபோல் கோவையில் உள்ள பல்வேறு ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

