கோவை அரசு மருத்துவமனை முன் சாலையோரங்களில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் ஆம்புலன்ஸ் இயக்கம், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை வேலாண்டிபாளையம் பொன்காளியம்மன் மற்றும் வீரமாச்சியம்மன் கோவில்களில் நடைபெற்ற ஆடிப்பண்டிகை திருவிழாவில் கரகம், திருக்கல்யாணம், மாவிளக்கு, பூவோடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவை ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டு நாடு முழுவதும் 76 ஆயிரம் பேரிடம் கண் தான உறுதிமொழி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மதுக்கரையில் நடைபெற்ற கூட்டுக் கொள்ளை வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட லேப்டாப், கைப்பேசிகள் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரம் மீட்கப்பட்டது.
கோவை வடவள்ளி அருகே குட்டிகளுடன் காட்டுப் பன்றிகள் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 8 வயது பெண் யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. உடற்கூறு ஆய்வின் முதற்கட்ட முடிவில் செரிமானக் கோளாறே காரணமாக இருக்கலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாமில், 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் பழங்குடியின பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் மூதாட்டியின் தொலைந்த மணிபர்ஸை கண்டுபிடித்து ஒப்படைத்த மனிதநேய செயல் பொதுமக்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.