கோவை அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினரின் கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது; 557 இடங்களுக்கு 5,046 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கோவையில் நடப்பாண்டில் ஜூலை வரை 12,345 மின் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட போலீசார் சார்பில் நடைபெற்ற “போதைப்பொருள் இல்லா கோவை 2026” மாரத்தானில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிலைய அலுவலர்களுக்கு 58 மீட்டர் உயரம் செல்லும் ஸ்கை லிப்ட் வாகனம் மற்றும் உயர்மட்ட மீட்புப் பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மதுபானக் கடைகளில் கூட்ட நெரிசலை குறைக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் ஆன்லைன் ஆர்டர் முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபரை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர்.
கோவையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்நாயக்கன்பாளையம், அரசூர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள் பாதிக்கப்படும்.
கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 7,000 லிட்டர் எரிசாராயத்தை, கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் கேரள கலால் துறையினர் இணைந்து பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
கோவை கணபதியில் மூதாட்டி மற்றும் அவரது பேத்தி தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் தலையணைக்கு அடியில் இருந்த பீரோ சாவியை எடுத்து தங்க நகைகள் மற்றும் செல்போனை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், செவிலியர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வருடன் ஆலோசித்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.