கோவை வேலாண்டிபாளையம் பொன்காளியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை திருவிழா கோலாகலம்

கோவை : கோவை வேலாண்டிபாளையம் பொன்காளியம்மன் மற்றும் வீரமாச்சியம்மன் கோவில்களில் நடைபெற்ற ஆடிப்பண்டிகை திருவிழாவில் கரகம், திருக்கல்யாணம், மாவிளக்கு, பூவோடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

கோவை வேலாண்டிபாளையம் சின்னத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்காளியம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ வீரமாச்சியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற ஆடிப்பண்டிகை திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழா, ஸ்ரீ பொன்காளியம்மனுக்கு 1008 குடம் தீர்த்த அபிஷேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றதுடன், தினமும் கும்மியடித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக, வேலாண்டிபாளையம் பெரிய விநாயகர் கோவிலில் இருந்து கரகம் மேளதாளம் மற்றும் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றதுடன், சீர்வரிசை தட்டுகளுடன் திருக்கல்யாண உற்சவமும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Advertisement

தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் படைத்தல், வீரமாச்சியம்மனுக்கு அணிக்கூடை எடுத்தல், மாவிளக்கு செலுத்துதல் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று வேலாண்டிபாளையம் பெரிய விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் முத்தாளை மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அம்மன் திருவீதியுலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது.

Advertisement

விழாவில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, மறுபூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு; கண் தானத்தில் 76 ஆயிரம் பேரை இணைப்பதே இலக்கு – துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

கோவை ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டு நாடு முழுவதும் 76 ஆயிரம் பேரிடம் கண் தான உறுதிமொழி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...