Coimbatore Breaking News: கோவையில் கொடூரம்: தீயில் கருகிய நிலையில் 23 வயது பெண் உடல் மீட்பு!

Coimbatore Breaking News: கோவையில் கல்லூரி அருகே தீயில் கருகிய நிலையில் இளம் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Advertisement

துடியலூர் வட்டமலைப்பாளையம் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் அருகே உள்ள காலி இடத்தில் தீயில் கருகிய நிலையில் ஏதோ ஒன்று கிடப்பது போன்று தெரிந்ததால், அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது தான் அது ஒரு பெண்ணின் உடல் என்பதும், தீயில் முழுவதுமாகக் கருகிக் கிடந்ததும் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, அது 23 முதல் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் என்பது தெரியவந்தது.

Advertisement

முற்றிலும் அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார், அந்த உடலை பிரேதப் பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “எரிந்து கிடந்த பெண்ணிற்கு சுமார் 25 வயது இருக்கலாம். அவர் சிவப்பு கலர் உடை அணிந்து உள்ளார். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.” என்றனர்.

Advertisement

கோவையில் பொறியியல் கல்லூரி அருகே எரிந்த நிலையில் இளம் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...