மீன்பிடி குத்தகை- கோவை ஆட்சியர் அறிக்கை…

கோவை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மின்னனு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

ஈரோடு மாவட்டம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பில்லூர் நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு மீன்பிடி குத்தகைக்கு விடமின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரால் வரவேற்கப்படுகின்றன.

ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் பார்வையிடவும். இந்த இணையவழி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஒப்பந்தபுள்ளி படிவம் மற்றும் இதர படிவங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் [19494/F3/2024-3] [2026_AHDF_679379_1] உள்ளீடு செய்து கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளி ஜீன் 18ம் தேதி அன்று காலை 9.00 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏலம் தொடர்பான தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு Inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பியும் அல்லது ஈரோடு மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ஏல அறிவிப்பில் மாற்றங்கள் ஏதேனுமிருப்பின் மேற்காணும் இணையதளம் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும் எனவும்

Advertisement

கூடுதல் தகவலுக்கு உதவி இயக்குநர், அலுவலகம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 7வது தளம் ஈரோடு-638 011 0424-2221912 தொடர்பு கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...