கோவையில் DMK GenZ Meet Up…

கோவை: கோவையில் திமுகவின் GENZ MEET UP நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை திமுக தற்பொழுது இருந்தே தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

குறிப்பாக இளம் தலைமுறையினர் சமூக வலைதளங்கள் ஆகியவற்றை கொண்டு அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை திமுக முன்னெடுத்து வருகிறது குறிப்பாக Gen Z தலைமுறையினரை கொண்டு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது அவர்களை முன்வைத்து சமூக நீதி பெரியாரின் கொள்கைகள் அறிஞர் அண்ணா கலைஞர் ஆகியோர் தமிழுக்கு மக்களுக்கு ஆற்றிய சேவைகள் கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டு உள்ளது.

மேலும் GENZ DMK MEETUP என்ற நிகழ்ச்சி மூலம் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் இளம்பெண்களை கொண்டு ஆய்வுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் சமூக வலைத்தளங்களில் எவ்வாறு சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் சமூகநீதி பெரியாரிசம் அறிஞர் அண்ணா கலைஞர் மு க ஸ்டாலின் ஆகியோர் மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை பற்றி மக்களிடம் எடுத்துரைப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இதில் கலந்துரையாடப்படுகின்றன.

Advertisement

இந்த நிகழ்ச்சி இன்று கோவையில் நடைபெற்றது. சரவணம்பட்டி- துடியலூர் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள் இளம்பெண்கள் பங்கேற்றனர் இதில் சமூக நீதி, தற்போதைய அரசியல் சூழல், தற்போதைய தமிழக வெற்றி கழக அரசுக்கும் முந்தைய திமுக அரசுக்கும் இருந்த வேறுபாடுகள் பற்றி கருத்துக்கள் பகிரப்பட்டன. குறிப்பாக இதில் தமிழக வெற்றிக்கழக அரசை விமர்சனம் செய்தும் சாடியும் பலரும் கருத்துக்களை முன் வைத்தனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...