கோவைக்கு பலாப்பழம் வரத்து அதிகரிப்பு!

கோவை: கோவைக்கு பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பலாப்பழம் சீசன் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் வரை நீடிக்கும். கோவைக்கு கடந்த மார்ச் மாதம் முதலே பலாப்பழம் வரத்து தொடங்கியது.

கோவைக்கு பன்ருட்டி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பலாப்பழம் விற்பனைக்காக வருகிறது.

Advertisement

தற்போது வரத்து அதிகரித்துள்ள நிலையில், உக்கடம் புல்லுக்காடு அருகே உள்ள பழ மார்க்கெட்டில், பலாப்பழம் கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவற்றில் புதுக்கோட்டை பலாப்பழம் தித்திப்பாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இனி வரும் நாட்களில் பலாப்பழங்களின் வரத்து அதிகரித்தால், அதன் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பி.எஸ்.ஜி இணை மருத்துவ அறிவியல் கல்லூரியின் 4-வது பட்டமளிப்பு விழா: 81 மாணவர்கள் பட்டம் பெற்றனர்!

கோவையில் பிஎஸ்ஜி இணை மருத்துவ அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 81 மாணவர்கள் பட்டம் பெற்று விழா சிறப்பாக நடைபெற்றது

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...