கோவையில் இரண்டு அமைச்சர்கள் – முழு பட்டியல் இதோ!

கோவை: கோவையைச் சேர்ந்த இரண்டு பேர் இன்று தமிழ்நாட்டின் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

Advertisement

சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

முதலமைச்சர் விஜய் உட்பட அமைச்சர்கள் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றனர். இதனிடையே இன்று 23 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.

இந்த 23 பேரில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 7 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

Advertisement

கோவையைப் பொறுத்தவரையில் தவெக 6 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தவெக எம்எல்ஏ விக்னேஷ் மற்றும் கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற சம்பத் குமார் ஆகியோர் இன்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

இதனிடையே தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Coimbatore ministers sworn in
Coimbatore ministers sworn in

இருந்த போதிலும், இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார்? அமைச்சர்களை குறிப்பிட்ட மாவட்ட பிரதிநிதிகளாக அல்லாமல் தமிழகத்தின் முகங்களாகவே அடையாளப்படுத்த முயற்சிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...