பேரூர் ஐடிஐ மாணவர் சேர்க்கை துவக்கம்…

கோவை: பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐடிஐ மாணவர்கள் சேர்க்கை-2026 துவங்கி உள்ளது.

கோவை மாவட்டம் பேரூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கடந்த 2025 ஆம் ஆண்டு புதிதாக துவங்கப்பட்டு அட்வான்ஸ்டு CNC மெசினிங் டெக்னீசியன் ஏரோநாட்டிக்கல் ஸ்டிரக்சர் & எக்யூப்மெண்ட் யிட்டர், மல்டிமீடியா அனிமேஷன் & ஸ்பெஷல் எபக்ட்ஸ்இன் பிளாண்ட் லாஜிஸ்டிக்ஸ் அஸிஸ்டென்ட், சென்ட்ரல் ஏர்கண்டிஷன் பிளான்ட் மெக்கானிக் ஒயர்மேன் போன்ற தொழிற்பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.

வாயிலாக விண்ணப்பங்கள் தற்போது சேர்க்கைகு 8-ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலின மாணவர்கள் (www.skilltraining.in.gov.in/detitiadm/login) என்ற இணையதளம் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

இத்தொழிற்பயிற்சி நிலையமானது முற்றிலும் கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே என்பதால் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை தவறாது கொண்டு வர வேண்டும்.

கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு/ 10-ம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பக்கட்டணம் : விண்ணப்பக் கட்டணத் தொகையானது ரூ. 50/- விண்ணப்பதாரர் Debit card/ Credit Card Net Banking,UPI(Gpay, Phonepee, etc)

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் : 03.08.2026
மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

Advertisement

சேர்க்கையில் சேர விரும்புவோர் 8-ம் வகுப்பு 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 எண்கள், ஆதார் அட்டை முக்கியமாக கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை அசல் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்: இராமலிங்க அரங்க வளாகம் வேடப்பட்டி ரோடு கனரா வங்கி பின்புறம், பேரூர் 641 010 என்ற முகவரியில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை அணுகவும்.

பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு இலவச மடிக்கணினி சீருடை பாடநூல்வரைபடக்கருவிகள், இலவச சைக்கிள் காலணி பேருந்து பயண அட்டை மாதாந்திர உதவித்தொகை ரூ. 750/அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ. 1000- உதவித்தொகையும் வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு 63848 12283, 93633 10833, 94439 73872, 95851 19929 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில்...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.