காரமடையில் பண்டல் பண்டலாக கஞ்சா பறிமுதல்- இருவர் கைது…

கோவை: கோவையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

கோவை மாவட்டத்தில் 5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் காரமடை காவல் நிலைய காவல் துறையினர் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, அருகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பகபான் ஜெகதீஷ் பரிஹா (25) ‌மற்றும் துபிச்சந்திர பதான் (22) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் நூறாண்டு உரமிடுதல் ஆய்வு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நூற்றாண்டு பழமையான நிரந்தர உரமிடுதல் ஆய்வு மற்றும் நீண்ட கால உர ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்கை வள மேலாண்மை இயக்குநரகத்தின் இயக்குநர் முனைவர். கார்த்திகேயன்,...

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...