Rasipalan Today | இன்றைய ராசிபலன்

Rasipalan Today: 12 ராசிகளுக்கான இன்றைய (ஜூன் 17ஆம் தேதி) ராசிபலனை இந்தத் தொகுப்பில் காணலாம்.

Advertisement

மேஷம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்திகள் வந்து சேரும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.

ரிஷபம்
திட்டமிட்ட காரியங்களைச் செயலாற்றுவதில் சிறு தாமதங்கள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படுவதால் சேமிப்பு கரையும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கையாள்வது தேவையற்ற மனவருத்தங்களைத் தவிர்க்க உதவும்.

மிதுனம்
உங்களின் நீண்ட நாள் ஆசைகள் மற்றும் எண்ணங்கள் நிறைவேறும். கலைத்துறையினருக்குப் புதிய மற்றும் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக அதிகரித்து மன நிறைவைத் தரும். ஆரோக்கியம் மேம்படும்.

Advertisement

கடகம்
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

சிம்மம்
தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் புதிய பயணங்களால் நல்ல லாபங்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். பூர்விகச் சொத்துக்களால் இருந்த வந்த வாரிசு ரீதியான பிரச்சினைகள் சுமுகமாக முடிவுக்கு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

Advertisement

கன்னி
சுபகாரியப் பேச்சுகள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். புதிய ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைக்கான யோகங்கள் அமையும். வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற நல்ல வேலை அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

துலாம்
மனதில் இருந்து வந்த தேவையற்ற குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய முயற்சிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றிகாண்பீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல ஒற்றுமை பலப்படும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதார வரவு திருப்திகரமாக இருக்கும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்குச் சந்திராஷ்டம தினம் என்பதால் முக்கிய முடிவுகளைத் தள்ளி வையுங்கள். பிறருடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் அவசியம். தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.

தனுசு
இன்று உங்களுக்குச் சந்திராஷ்டம காலம் என்பதால் புதிய காரியங்களைத் தொடங்குவதைத் தவிர்க்கவும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற மன உளைச்சல்கள் வந்து நீங்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

மகரம்
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த அரசு வழி காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். கடன் தொல்லைகள் படிப்படியாகக் குறையும். ஆன்மீகப் பயணங்களில் ஆர்வம் அதிகரித்து மன அமைதி கிட்டும்.

கும்பம்
தொழிலில் நல்ல முன்னேற்றமும் புதிய வாடிக்கையாளர்களின் வருகையும் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் மற்றும் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்
சகோதர வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வராத என்று கைவிட்ட பழைய கடன்கள் வசூலாகும். பூமி மற்றும் மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்களின் புத்தி கூர்மையால் கடுமையான பணிகளையும் எளிதாக முடித்து சாதனை படைப்பீர்கள்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

போதைப்பொருளுக்கு எதிராக கோவை போலீசார் நடத்திய மாரத்தான்; குவிந்த மக்கள்!

கோவை மாவட்ட போலீசார் சார்பில் நடைபெற்ற “போதைப்பொருள் இல்லா கோவை 2026” மாரத்தானில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.