லாட்ஜில் தங்கிய தொழிலாளி திடீர் உயிரிழப்பு- போலீசார் விசாரணை

கோவை: கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தங்கியிருந்த தொழிலாளி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை அருகே வேடப்பட்டி வன்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கர் (44). தொழிலாளியான இவர், குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.

குடிப்பழக்கம் கொண்ட சங்கர், அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று தனது தாயார் சாந்தம்மாளிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு புறப்பட்டார்.

Advertisement

பின்னர், கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரு லாட்ஜில் தனது இரண்டு நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அவரது நண்பர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது, சங்கர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…

கோவை: மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகளை கணக்கெடுக்க இல்லம் தேடி வரும் பணிகள் நடத்தப்படுகிறது கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் (Community Rehabilitaion Worker...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...