வறட்சியால் ஊருக்குள் வந்த காட்டு யானைகள் – மாமரத்தில் மாங்காய் பறித்து சாப்பிட்ட ‘பாகுபலி’ – வீடியோ

கோவை: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நிலவி வரும் வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறிய காட்டு யானைகள், ஓடந்துறை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ‘பாகுபலி’ உள்ளிட்ட இரண்டு காட்டு யானைகள், ஓடந்துறை அருகே உள்ள வினோபாஜி நகர் பகுதியில் நேற்றிரவு நுழைந்தன.

பின்னர் அங்கிருந்த தனியார் தோட்டத்திற்குள் சென்ற யானைகள், மாமரத்தில் இருந்த மாங்காய்களை பறித்து சாவகாசமாக சாப்பிட்டன.

யானைகள் தோட்டப்பகுதியில் சுற்றித்திரிந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காட்டு யானைகளை பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Advertisement

வீடியோ

வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் காட்டு விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் தொடங்கியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...