நெகமம் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு – போலீசார் தீவிர விசாரணை

கோவை: நெகமம் அருகே தோட்டப் பகுதியில் மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை மாவட்டம் நெகமம் அடுத்த என்.சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல். இவரது தோட்டம் அருகே மனித எலும்புக்கூடு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Click here to Read news: கோவில்மேடு டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மக்கள் போராட்டம்!

தகவலின் பேரில் பொள்ளாச்சி காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார், கோமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனன் மற்றும் தடய அறிவியல் நிபுணர் பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

அங்கு கிடந்த மனித எலும்புக்கூடுகளை போலீசார் கைப்பற்றி, மேலான பரிசோதனைக்காக கோவை சி.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எவ்வாறு உயிரிழந்தார், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற பல்வேறு கோணங்களில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...